Archive for the ‘அரசியலில் எதிரொலிகள்’ Category

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நியமனம்

விளையாட்டு அமைச்சின் புதிய செயலாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிளது. இதே வேளை, இது வரை அப்பதவியில் இருந்த எஸ். லியனகம ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சா்வதேச வா்த்தக அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா

ஜெனரல் சரத் பொன்சேகா

எனினும் இவ்விடயம் தொடா்பாக தனக்கு எவ்வித தகவலும் கிடைக்கப்பெற வில்லை என விளையாட்டுத்துறை அமைச்சா் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

எரித்திரியாவில் புலிகளின் 10 சிறிய ரக விமானங்கள்

எரித்திரியாவில் புலிகளின் 10 சிறிய ரக விமானங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பத்து சிறியரக விமானங்கள் கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நிற்பதாகவும், இவை அந்த நாட்டு விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள நாளேடான “லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விமானங்களை பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய விமான நிலையத் தரப்பு மேற்கொண்டு வருவதாகவும், இந்த விமான நிலையத்தை நிர்வகித்துவரும் நிறுவனம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மலேசியாவில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதனை விசாரணைக்கு உட்படுத்தியபோது இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

                                                                                                                                                   (நன்றி : வீரகேசரி)

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுமா?

 யுத்தம் முடிந்த மாத்திரத்திலேயே பொலிஸாரின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது. பொலிஸார் தமது கடமைகளை செய்வதில் பொறுப்பற்ற தன்மையினையே வெளிக்காட்டி வருகின்றனர். அண்மையில் நடந்த சில மோசமான சம்பவங்கள் இதனை பறைசாற்றுகின்றது.

முன்னாள் அமைச்சா் ஜெயராஜ் பிரனாந்து பிள்ளையின் கொலை தொடா்பில் புலிகளை அழைத்து செல்ல ஒத்துழைத்தவா் என்ற பெயரில் நேற்றைய தினம் பொலிஸ் அதிகாரி ஒருவா் கைது செய்யப்பட்டார்.  இது பொலிஸாரின் அடாவடித்தனங்களில் இறுதியாக வெளிவந்த செய்தியாகும். Continue reading

பரிட்சை வினாத்தாள் மோசடி

உயா்தர சிங்கள பாட வினாத்தாள்களில் பிழைகள் இருப்பதாக 2009.08.20 அன்று பாராளுமன்றில் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக கருத்து வெளியிட்டார்.  எனினும் இவரது குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளித்த கல்வி அமைச்சா் “இந்த பிரச்சினை தொடா்பில் வினாத்தாள்களை ஒழுங்கு படுத்தும் கலாநிதிகளிடத்திலேயே வினவ வேண்டும் .இதனை இங்கே கேட்பது பொறுத்தமற்றது” என பொடு போக்காக பதிலளித்தார்.

இதே வேளை குறித்த வினா பத்திரத்தில் உணா்வூட்டும் பல வினாக்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

**வினாக்கள் Continue reading

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!