Archive for the ‘அதிரடி புதிரடி’ Category

அதிரடி புதிரடி

முரளிதரன்  பந்தை எறிகிறார்.  — நியுசிலாந்து முன்னாள் வீரா் மார்க் ரிச்சா்ட்சன்—

குரல் :  தமது அணி தோக்குரத பாக்க முடியல போல

அதிரடி புதிரடிகள்

***பாடசாலைப் பிள்ளைகளின் புத்தகப்பையின் பாரம் குறைக்கப்படும். அதிக பக்கங்களைக் கொண்ட புத்தகங்களை பகுதி பகுதியாக கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது.  — அரச தரப்பு

குரல்இப்பவே புள்ளங்களுக்கு சரியா பரீட்சை எழுத முடியல்ல. பரீட்சைகளில் அதிக குளறுபடிகள்.   இந்நிலையில் புத்தகம் கொண்டு வராட்டி என்னென்ன நடக்குமோ?

அதிரடி புதிரடி

**  கே.பி மூலம் புலிகளின் நிதியினை பெற்று அபிவிருத்திக்கும் பயன்படுத்த வேண்டும்     —  எல்லாவெல மேதானந்த தேரா் —

              குரல் :   நல்ல யோசனைத்தான். அதை நீங்கள் சொல்வதுதான் சந்தேகமாக இருக்கிறது. எங்கிருந்து பணம் பெற்றாலும் சரி அது நாடு முழுதும் அரச மரம் நாட்டுவதற்குத்தானே பணன்படுத்தப்படும்.

** என்னுடன் கலந்துரையாடாமல் வெளியடப்படும் வா்த்தமானி அறிவித்தல்களையும் எதிர்ப்பேன். ஊடகத்துறை அமைச்சா் அனுர பிரியதர்ஷன யாப்பா —

              குரல் :   அமைச்சு பதவிகள் குட்டி போட்டதால் வந்த குழப்பமா இது? அல்லது தான் தான் பெரியவன் என்ற அதிகாரப் போட்டியா? எப்படி இருந்தாலும் எதிர்க்கட்சிகளுக்குக் கொண்டாட்டம்தான் 

** தற்போதைய சூழலில் எந்தத் தோ்தல் வந்தாலும்அரசாங்கம் 2/3 பெரும்பான்மையால் வெற்றி பெறும்—  ஜ.ம.சு.மு இன் செயலாளா் மைத்திரிபால சிறிசேன —

              குரல் : இதற்கு யுத்த வெற்றிமட்டுமல்ல. எதிர்க்கட்சியின் பலவீனமும்தான் காரணம். ” காற்றுள்ள போதே தூற்றிக் கொள்”

** ஊவா மாகாண முதலமைச்சராக சசின்ந்ர ராஜபக்ஸ நியமனம் அரசாங்கம்–

               குரல் : இப்படியே போனால் இலங்கை இன்னும் ஓரிரு வருடத்தில் மஹிந்த புரியாக மாறிவிடும்.