ஐ.சி.சி சாம்பியன் கிண்ணம் ஆஸி. வசம்

1517தென்னாபிரிக்காவில் நடைபெற்று வந்த ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் நியுசிலாந்து அணியை 06 விக்கட்டுகளால் தோற்கடித்து கிண்ணத்தை அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியது.

தென்னாபிரிக்கா சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியுசிலாந்து அணி முதலுல் துடுப்படுத்தாடியது. ஆரம்பம் முதலே ஆஸி பந்து வீச்சாளா்களின் துள்ளியமான பந்து வீச்சிக்கு முகங் கொடுக்க முடியாமல் நியுசிலாந்து அணி துடுப்பாட்ட வீரர்கள் திக்குமுக்காடினர். சம இடைவெளிகளில் விக்கட்டுகளை இழந்த நியுசிலாந்து அணி இறுதியில் 50 ஓவா்களில் 09 விக்கட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது. இதில் குப்டில் 40 ஓட்டங்களையும், நில் புறும் 38 ஓட்டங்களையம் பெற்றனா்.  பந்து வீச்சில் ஆஸி அணி சார்பில் ஹொரீஸ் 03 விக்கட்டுகளையும், பிரட் லீ 02 விக்கட்டுகளையும் பெற்றனர்.

201 என்ற வெற்றி இழக்கை நோக்கி பதிலடித்தாடிய ஆஸி அணி 06 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை 02 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும்சிறப்பாக   செயற்பட்ட  வொட்சன், வைட் ஜோடி 128  ஓட்டங்களை பகிர்ந்து வெற்றிக்கு வித்திட்டது. இறு தியில் 45.2 ஓவா்களில் 04 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதில் வொட்சன் 105 ஓட்டங்களையும், வைட் 61 ஓட்டங்களையும் பெற்றனா்.

1515போட்டியின் ஆட்ட நாயகனாக வொட்சன் தெரிவு செய்யப்பட்டார்.

1516தங்க துடுப்பு அதிக ஓட்டங்களை குவுத்த ஆஸி அணித்தலைவா் ரிகி பொன்டினுக்கு கிடைத்தது.

1519தங்க பந்து அதிக விக்கட்டுகளை வீழ்த்திய தென்னாபிரிக்கா பானேலுக்கு கிடைத்தது. 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: