5000 யானைகள் இடமின்றி மேலதிகமாக வாழ்கின்றன என்ன செய்வது

 DSC01535இலங்கையில் தற் போது யானைகளுக்கும் மனிதர்க ளுக்குமிடையில் பாரிய முரண்பாடு நிலவி வருகிறது. மனிதர்கள் பயிரி டும் நிலங்களை யானைகள் நாசம் செய்வதும் , யானைகள் வசிக்கும் பிரதேசங்களில் மனிதர்கள் சென்று வசிப்பிடங்களை அமைப்பதும் இம் முரண்பாடுகள் உருப்பெற முக்கிய காரணங்களாகும். 
 மனிதர்கள் யானைகளின் வாழிடங்களை அழிக்க முனைவது மிக முக்கியமான அச்சுறுத்தல் ஆகும். blindmen-elephantமனிதர்கள்; வேளாண்மை விரிவாக்கத்துக்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்து வருகிறார்கள். இது மனிதர்களின் நலனுக்கும் யானைகளின் நலன்களுக்கு மிடையே முரண்பாடுகளை உருவா க்குகின்றது. எடுத்துக் காட்டாக யானைகள் புதிய வேளாண்மைக் குடியேற்றங்களுக் குள் நுழைந்து பயிர்களை அழித்து விடுவதுடன் மக்களுக்கு உயிராப த்தையும் ஏற்படுத்து கின்றன. இவ்வாறான முரண்பாடு களால், இலங்கையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 150 யானை களும், 100 மனிதர்களும் இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.     மறுபுறம் இயற்கையும் இந்நிலைக்கு மற்றுமொரு காரணமாக அமைந்து வருகிறது. யானைகள் மரம் செடிகொடிகளை உண்ணும் இலையுண்ணி அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும் இவற்றின் சமிபாட்டுத்  திறன் மிகவும் மந்தமானது. எனவே இவை உண்பதில் 40 வீதமே சமிபாடு அடைகிறது. எனவே இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. DSC01527இந்நிலையில் யானைகள் தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்வத ற்காக  வேண்டி மக்கள் குடி யேற்றங்களை நாடி செல்ல வேண்டிய ஓர் சூழ்நிலை ஏற் பட்டு விடுகி ன்றது. இவ்வாறு இரு தரப்பினரும் இம் மோதலால் பாதி க்கப்ப படு கின்றனர். ஆக வே இப் பிரச்சி னைக்கு உடன டிதீர் வொன்றை காண வேண்டிய தேவை எழுந் துள்ளது.
 முதலில் இப்பிரச் சினை தோன்று வதற்கான பிரதான காரணங்களை கண் டறிய வேண்டும். யுhனைகள் தம் உணவுத் தேவையை பூர்த்தி செய்துக் கொள்ள மக்கள் குடியே ற்றங்களை நாடி செல்வதற்கு  இயற்கையும் ஓர் காரணமாய் அமைநத்து
விடுகின்றது. இலங்கையில் தற் போதைய கணக்கெடுப்பின் படி 7000 யானைகள் வசிக்கின்றன. ஆனால் இவை வசிப்பதற்கான நிலப்பரப்பு 1 இலட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேயரே இருக்கின்றது. எனினும் ஓர் யானை சுதந்திரமாக 10 சதுர கிலோ மீற்றர் தூரம் பயணிக்கக் கூடியது. இதன்படி இலங்கை நிலப்பரப்பில் 1200 யானைகளே வாழ முடியும். அதன் படி இங்கு 5000 யானைகள் இடமின்றி மேலதிகமாக வாழ்கின்றன. என சூழல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.  எனவே இயற்கை நியதிக்கு மாறுபாடாக வாழும் யானை இனம் தமது சுதந்திரத்தை பெற்றுக் கொள்ள தமது நிலப்பரப்பை விரிவுபடுத்த விரும்புகின்றன. இதுவே  மனிதனின்; வசிப்பிடம் நோக்கி யானைகள் இடம்பெயர ஏதுவாய் அமைந்துள்ளது. 
 இவ்வாரான      நி லைகள் இருக்க ,கடந்தகாலங்களில் அரசியல் வாதிகள் தமது சுய நலத் திற்காக வேண்டி மக்களை யானை கள் வாழ் வதற்காக வேண்டி பிரகடனப் படுத்தப்பட்ட நிலப ;பகுதிகளில் சென்று குடி யமர்த்தினர். தற் போது இம் மோதல் காரணமாக அவர் களை வேறு இடங் களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்ட போது அவர்கள் அதனை நிராகரித்தனர். இதே போன்று வேறு இல்லங்களை அமைத்துக் கொடுக்க முயன்றும் அதற்கும் அவர்கள் இசைந்து கொடுத்ததாக இல்லை என சூழல் மற்றம் இயற்கை வளங்கள் அமைச்சின் ஊடக செயலாளர் அருனி முதுமாலி தெரிவித்தார்.
உண்மையில் மனிதனை சிறப்பாக பயிர் விளையும் நிலங்களைவிட்டு வெளியேறுமாறு பணித்தால் அதனை விட்டு விட்டு வெளியேறும் அளவிற்கு அவன் மனம் படைத்தவன் அல்ல. ஆகவே யானையின் மீது கவனத்தை செலுத்துவதே சாலச் சிறந்தது.
 அரசு யானைகளை பாதுகாக்க பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. DSC01522இதில் ;யானைகளை வேலி அமைத்து பாதுகாக்க அரசு முன்வந்துள்ளது. இதன்படி 1990 ஆம் ஆண்டு ஓர் திட்டமொன்றை கொண்டு வந்து வருடத்துக்கு 60 கி.மி பரப்பில் வேலி அமைக்கும் பணியை ஆரம்பித்தது. இத் திட்டம் தற்போது வருடத்துக்கு 220 கி.மி என்ற அடிப்படையில் 3 வருடத்துக்கு 660 கி.மி வேலி அமைக்கும் பணியாக முன்னேற்றம் கண்டுள்ளது.
   யானை வசிக்கும் சரணால யங்களை ஓர் பாதையினூடாக இணைக்கும் செயற் திட்ட மொன்றும் முன் னெடுக்கப்பட்டு வருவதாக. சூழல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு தெரி விக்கிறது.
இவ் வாரான செயற்த்திட்டங ;களை அரசு  முன்னெடுப்பதாக கூறிய போதும் யானை , மனித மோதல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. எனவே குறித்து யதார்த்தமான முடிவொன்றை எடுக்க வேண்டும்.      சூழல்   சம நிலையை பேணுவ தற்காக வேண்டி ஆபிரிக்கா போன்ற நாடுகளில் அண்மையில் 20,000 , 30,000 வரையான யானைகள் சுட்டுக் கொள்ளப் பட்டன. எனினும் இந்த திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சாத்தியமற்றது. காரணம் பண்டைய காலந்தொட்டு இலங்கையர்கள் யானையுடன் மிக நெருங்கிய தொடர்பினை மேற் கொண்டு வருகின்றமையாகும். ஏன சூழல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சின் ஊடகச் செயலாளா தெரி வித்தார்.
    இந்த நிலையில் யானைகளின் துரித பெருக் கத்துக்கு அரசு உடனடி தீர்வினை எடுக்க வேண்டும். இன்றேல் விளைவு பாரியதாய் அமையும். எனவே யானைகளின் பெருக் கத்தை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். அதே வேளை பொது மக்கள் தமக்கென ஓர் கட்டுப்பாட்டை விதித்து செயற்பட முன்வர வேண்டும். அது போலவே பொது மக்களுக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அவர்கள் யானைகளின் உரிமைகள் மீறும் அளவிற்கு செல்லக் கூடாது. இதனை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் யானைகள் தமது கருமங்களை தமது பாட்டில் ஈடுபடவும், யானை தொல்லையின்றி மனிதர்கள் வாழவும் வழி   யேற்படும் என்பதில் ஜயமில்லை.         

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: