தண்டவாளத்தில் திண்டாட்டம்

 “எங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள் கூட எங்களது பேச்சைக்கேட்டதை விட ரயில்செல்லும் சத்தத்தைத்தான் அதிகம் கேட்கின்றது. குழந்தைகளை ரயிலின் ஆபத்திலிருந்து பாதுகாப்பதிலே எங்களது பொழுது; கழிகின்றது.” இக்குரலோசையானது கொழும்பு கொட்டாவ ரயில் பாதையோரம் வசித்து வரும் 48 வயதையுடைய சீதாவின் குரலோசையாகும் .

     ஆம் உண்மைதான் இது ;சீதாவின் அனுதாபக்குரல் மாத்திரமல்ல கொட்டாவ ரயில பாதை ஓரப் பகுதியில் வாழும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் கருத்தும் இதுவே. “நிம்மதியாய் தூங்கி எழமுடியல” “எமதுபிள்ளைகள் சரியாக படிக்க முடியல” இக்கருத்துக்கள் எல்லாம்  அப்பகுதியில் வசித்து வரும் மூவினமக்களும் கண்ணீர ;வடித்து வடித்து கூறும் சோகக்கதைகளாகும்.

   

     சுமார் 200 குடும்பங்களுக்கு மேலாக மூவினத்தையும் சார்ந்தோர் வசித்து வரும்பகுதியான கொழும்பு கொட்டாவ ரயில்பாதையோர பகுதி காணப்படுகின்றது. இங்கு வசித்து வருகின்றவர்கள் பெரும்பாலும்  கூலித் தொழிலையே ஜீவனோபாயமாக கொண்டுள்ளனர். அரச பதவிகளையோ அல்லது படித்து முன்னிலைவகித்தவர்கள் என்றநபர்களோ ஒரு வீதத்தைக் கூடகாண்பது கஸ்டமாகவுள்ளது மிகவும் நெருசலான சிறிய பலகையினை  கொண்ட வீடுகளிலே வசித்து வரும் இம்மக்கள் பெரும் அசௌகரிகங்களை சந்திக் கின்றனர்.;IMG_4005

   

     பலநுற்றுக்கணக்கான நபர்களைக் கொண்ட இப்பிரதேச வாசிகளுக்கு சீரான

குடிநீர் வசதிகூடஇல்லாதுள்ளது. சுமார் 100 மீற்றர்தூரமளவிற்கு சென்றே தண்ணீர் எடுத்து வருகின்றனர். இத்தோடு மாத்திரமின்றி இவர்களுக்கு மூன்று பொது கழிப்பறைகள் மாத்திமே உள்ளன.இலங்கையின் தலைநகரான  கொழும்பு மா நகரில் இப்படியும் ஒரு சமூகம் வாழ்க்கை நடத்துகின்றது எனின் இதனை எண்ணிப்பார்க்க முடியாதல்லவா? IMG_4019ரயில் செல்லும் பாதையை விட்டும் சுமார் ஒன்றரை அடி மிக நெருங்கிய தூரத்தில் இம்மக்களின் வீட்டு வாசல்கள் அமைநதுள்ளன. இவ்விடங்களில்60 வருடத்திற்கும் மேலாக அம்மக்கள் வாழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  ; அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாழும் அம்மக்கள் தாம் இருக்கும் இடத்திலே இருக்க விரும்புகின்றனர். தாம் இடம் பெயர்ந்துவாழ்வதை ஒருபோதும் விரும்பாதவர்களாகவே காணப்படுகின்றனர். காரணம் 60 வருடத்திற்கு மேலால் துன்பங்களை சுமந்து இங்கேயே வாழ்ந்து விட்டோம் என்ற ஆதங்கமாகும். இதற்கு இன்னுமொரு காரணமும் அடிப்படையாக அமைந்து

காணப்படுகின்றது.அதாவது அரசியல் அதிகாரிகள் பலர் பலவருடங்களாக அவ்விடங்களுக்கு வருகை தந்து வீட்டுத்திட்டம் பற்றியும்  வீதி புணர்நிர்மாணம் பற்றியும் பல திட்டங்களை சொல்லி  சென்றுள்ளனர்;.

     இத்திட்டங்களை நம்பி யிருந்த மக்களுக்கு இறுதியில் பலத்த ஏமாற்றமே கிடைத்துள்ளது .இதன் விளைவும் அவர்கள் அவ்விடத்தில் பிடிவாதமாக இருக்கக் காரணமாகும். தாம் சுத்தப்படுத்தும் துணிகளைக் கூட உலர வைப்பதற்கு இடமில்லாது தமது வீட்டுக் கூரைகள் மீது போடப்பட்டுள்ள காட்சிகள் அவர்களின் அவல நிலையினை எடுத்துச் சொல்கின்றது.

இம்மக்கள் வாழும் இப் பிரதேசங்களில் ஆகக் குறைந்தது மிக அவசியத் தேவையான குடி நீர்வசதி  மலசலகூடவசதி ஆகியவற்றையாவது

பலவருட காலம் சென்றும் எவராலும் செய்து தரப்படவில்லை என்பது அம்மக்களின் பெரும் துயரச்செய்தியாகும். இவர்களை ஊடறத்து ரயில் பயணிக்ககின்ற போது பல வேலைகளில் விபத்துக்களைக்கூட இம்மக்கள் சந்தித்துள்ளனர். தங்கள் மூலமாக வெளியேற்றப்படும்’ அழுக்கு களையும.; குப்பைகளையும் தங்கள் வசிப்பிடங்ளுக்கு அருகாமையிலே கொட்டி வருகின்றனர்.இதனால் துர ;நாற்றம் வீசிகின்றது. உலக சுகாதார மையத்தின் தலைவர் நம்நாட்டில் இருந்தும் கூட அதுவும் கொழும்பு மா நகரில் இப்படியொரு நிலமையென்றால் நம் நாட்டிற்கே இதுவொரு அவல நிலையாகும். இவ்வழுக்குகள் காரணமாக அப்பிரதேசம் முழுக்க டெங்கு பரவி விடுமோ என அம்மக்கள் அச்சப் படுகின்றனர்.

     எப்போது மேற்சொன்னது போன்று அம்மக்களின் தேவைகளான வீடுஅமைத்துக்கொடுத்தல,;  மலசல கூட மற்றும் தண்ணீர் வசதிகள் பாதைப்புணர் நிர்மானம் ஆகியவைகள் சரிவர செய்து கொடுக்கப்படுமோ அப்போது

அம்மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்வதோடு அவர்களின் குழந்தைகளின் கல்வித்தரமும் உயருமல்லவா? எனவே இவ்விடயம் தொடர்பில் அப்பிரதேச மக்களும் அரசியல்வாதிகளும் ஒன்றினைந்து செயற்படல் வேண்டும்.

மேலதிக தகவல்கள்

இடம் கொழும்பு கொட்டாவ            ரயில் பாதையயோரம்
வசிப்பவர்கள்– தமிழ் முஸ்லிம்      சிங்கள        இனத்தவர்கள்
மொத்த குடும்பம்– 200 இற்கும்     மேற்பட்டவர்கள்
தொழில்– கூலித்தொழில்    செய்பவர்கள்
குடியிருக்கும் காலம்–   60வருடங்களுக்கும்   மேல்
பிரதானஉணவு– சோறு கோதுமை
படித்தவர்கள்– 2     வீதத்திற்கும் குறைவு
குடியிருக்கும் வீடு– பலகையிலான   சிறு     கொட்டில்
ரயில் பாதைக்கும் வீட்டிற்கும் இடைப்பட்டதூரம்–           ஒன்றரை அடி
அவசியத்தேவை–    3பொது கழிப்பரைமாத்திரம்-  தண்ணீர்  பற்றாக்குறை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: